நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம்
ஆரோக்கிய செயன்முறை மற்றும்; திறனான தொழில்நுட்பச் செயற்பாடு மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகள் என்பவற்றினுடாக ஏற்றுமதி விவசாய பயிரின் இறுதி உற்பத்தியின் தரத்தினை மேம்படுத்ததல்.
யார் விண்ணப்பிக்க முடியும்:
ஏற்றுமதி விவசாய பயிரின் தனிப்பட்ட முறையில் பயிரிடுவோர், விவசாய குழுக்கள், தோட்டத்துறையினர் மற்றும் ஏற்றுமதி விவசாய பயிர்களின் பேரளவில் பயிரிடுவோர் விண்ணப்பிக்கலாம்.
சேவையின் தன்மை :- மூன்று உதவித் திட்டங்கள் கிடைக்கப் பெறுகின்றன.
1) குழுச் செயன்முறை நிலையங்கள்.
திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட செயல்மிக்க சமூக அடிப்படையிலான ஒழுங்கமைப்புகளுக்கு உதவிகள் வழங்கப்படும். சமூக அடிப்படையிலான நிறவனத்தை செயற்பாட்டு நிலையங்களாகவும் இலாபகரமானதாகவும் திறனான முறையிலும் முன்னெடுத்துச் செல்வதற்கு சூழவுள்ள பிரதேசங்களில் போதிய அளவு உற்பத்தி உள்ளதா என்பதை உறுதிப்படுத்துதல் வேண்டும். திட்டத்தில் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் கருத்திட்ட மும்மொழிவினை சமர்ப்பித்தல் வேண்டும். கருத்திட்ட மும்மொழிவினை சமூக அடிப்படையிலான ஒழுங்கமைப்புக்கள் அதன் நிதி நிலமை, மற்றும் நிர்வாக இயலுமை, மற்றும் செயற்திட்டம் மற்றும் எதிர்கால நிகழ்ச்சித்திட்டம் என்பன விரிவாக எடுத்துரைத்தல் வேண்டும். கருத்திட்ட மும்மொழிகை போதிய தொழில்நுட்பத்தை கொண்டிருத்தல் மற்றும் பொருளாதார ரீதியில் அனுமதி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் திணைக்களத்தின் சிபாரிசு செய்யப்படும் இயந்திரங்களை பொருத்துவதற்கு சமூக அடிப்படையிலான ஒழுங்கமைப்புக்கள் கட்டட வசதிகளை செய்து கொடுத்தல் வேண்டும். திணைக்களம் 5 வருட கால கடன்களை சமூக அடிப்படையிலான ஒழுங்கமைப்புக்களுக்கு குறிப்பிட்ட பயிர்/பயிர்களுக்காக சிபாரிசு செய்யப்பட்ட சகல இயந்திரங்களையும் வழங்கும். செயலாற்றுகையினை மீளாய்வு செய்து 5 வருட இறுதியின் போது சமூக அடிப்படையிலான ஒழுங்கமைப்புகளுக்கு இயந்திரங்கள் கையளிக்கப்படும்.
2) மத்திய விதை செயற்பாட்டு நிலையம்.
இத்திட்டத்தின் கீழ் பேரளவிலான செயற்பாட்டு நிலையங்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தில் தோட்டத்துரையினர், ஏற்றுமதி விவசாய பயிரினை பேரளவில் உற்பத்தி செய்வோர் அல்லது செயற்படுவோர் உள்ளடக்கப்படுகின்றனர். ஆர்வமுடையவர்கள் எவராயினும் சமூக அடிப்படையிலான ஒழுங்கமைப்புக்கள் அல்லது தனியார் விண்ணப்பிப்பதற்கு தகைமைக் கொண்டவர்களாவர். எப்படியாயினும் மொத்த முதலீடானது ரூபா 1 மில்லியனைவிடவும் அதிகமாக இருத்தல் வேண்டும். கருத்திட்ட மும்மொழிகைகள் சமர்ப்பித்தல் வேண்டும். அது எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்களை குறிப்பிடுதல் வேண்டும். அத்துடன் போதிய உற்பத்தி அடிப்படையில் கிடைப்பணவுகளை வழங்கும் நிலையங்களில் செயற்திட்டம் என்பவற்றை குறிப்பிடுதல் வேண்டும். கருத்திட்ட மும்மொழிகையின் போதிய தொழில்நுட்பத்தை கொண்டிருப்பின் பொருளாதார ரீதியில் நிர்மான வேலைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.
விண்ணப்பக்காரர் இயந்திரங்களை கொள்வணவு செய்தல் வேண்டும். அத்துடன் தேவையான தொழில்நுட்ப உதவிகளை திணைக்களம் வழங்கும் அலகிற்கான மொத்த முதலீடு ரூபா 1 மில்லியனுக்கும் குறையாது இருத்தல் வேண்டும். முதலீட்டு செலவின் 25மூ தை திணைக்களம் வழங்கும் ஆனால் ஆகக் கூடிய தொகையாக ரூபா.500,000 ஆக இருக்கும் (மொத்த முதலீடு ரூபா.2 மில்லியன) வேலை முடிவுருத்தப்பட்டதன் பின்னர் கொடுப்பணவுகள் மேற்கொள்ளப்படும் அத்துடன் அலகின் முன்னேற்றம் மதிப்பிடப்படும்.
3) தனியார் செயற்பாட்டு நிலையங்கள்.
தனியார் செயற்பாட்டு அலகுகளுக்காக உதவிகளின் நோக்கமானது பெறுமதி சங்கிலித் தொடரின் தனியாரது படிநிலைகள் மேம்படுத்துவதினால் இறுதி உற்பத்தியின் உயர் தரத்தினை அடைவதாகும். நடுத்தர அளவிலான ஏற்றுமதி விவசாய பயிர் வளர்ப்பாளர்கள் வெளிவளர்ப்புக் குழுக்களாக ஸ்தாபித்தல், தோட்த்துறை, அல்லது நடுத்தர அளவிலான செயற்பாட்டாளர்கள் ஏற்றுமதி விவசாய பயிர் சேகரிப்பாளர்கள் ஆகியோருக்கு இதற்காக விண்ணப்பிக்கலாம்.
சமூக அடிப்படையிலான ஒழுங்கமைப்புக்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் நிறுவனத்தில் யாராவது ஒருவர் திணைக்களத்தின் ஒழுங்குவிதிகளுக்கு இயைய உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொருப்புக்களை கையேற்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அறுவடைக்குப் பின்னரான இயந்திரங்கள் உபகரணங்கள் உலர்த்திகள் மற்றும் செயன்முறை கொட்டில்கள் மற்றும் ஏனைய வசதிகளும் விண்ணப்பக்காரருக்கு சலுகை விலையில் வழங்கப்படும் கட்டடம் மற்றும் இயந்திரம் என்பன பொருத்தியதன் பின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவர்களுக்கு நிதிக் கொடைகள் பெற்றுக் கொடுக்கப்படும்.
|
பொருள் / முதலீடு
|
நிதி கொடை/பொருள் அல்லது அலகு
|
|||
|
A.
|
மிளகு செயன்முறை | |||
|
a.
|
மிளகு திரஸஸ் | |||
| மெனுவல் (கையால்) |
10,000
|
|||
| மின்னியல் | 20,000 | |||
| என்ஜின் டைவன் | 22,500 | |||
|
b.
|
பச்சமிளகு பழம் வேறுபடுத்துகை |
8,000
|
||
|
c.
|
பிளான்சர் |
1,000
|
||
|
d.
|
தரம்/விசிறி |
15,000
|
||
|
B.
|
கோப்பி செயன்முறை | |||
|
a.
|
கோப்பி கலவை | |||
| மெனுவல் (கையால்) |
5,000
|
|||
| மின்னியல் | 15,000 | |||
|
b.
|
ஹல்லர் |
10,000
|
||
|
C.
|
கொக்கொ செய்கை | |||
|
a.
|
2'x2'x2' அளவான புளிக்கவைக்கும் பெட்டிகள் (3) |
4,500 (1,500/பெட்டி)
|
||
|
b.
|
புளிக்கவைக்கும் அலகு |
6,000 / அலகு
|
||
|
D.
|
முக்கியமான எண்ணெய் துளைப்பு அலகு | |||
|
a.
|
புதிய |
75,000
|
||
|
b.
|
பழுது பார்த்தல் |
இன்றவரை 75,000
|
||
|
E.
|
செயன்முறை அலகு | |||
|
a.
|
கறுவா ( குறைந்தது 400 சதுர அடி) |
40,000 /அலகு
|
||
|
b.
|
ஏனைய பயிர்கள் ( குறைந்தது 400 சதுர அடி) |
25,000 / அலகு
|
||
|
F.
|
உலர்ப்பு | |||
|
a.
|
பல்நோக்க உலர்ப்ப (கொள்ளலவு 250 கி.கி.அல்லது அதற்கு மேல்) |
100,000
|
||
|
b.
|
சூரிய ஒளி உலர்ப்பு (100 சதுர அடி) |
10,000 ( கூடிய)
|
||
|
c.
|
பாதுகாக்கப்பட்ட நில உலர்ப்பு (200 சதுர அடி அல்லது அதற்கு மேல்) |
25 ரூபா / சதுர அடி
|
||
|
d.
|
விரிந்த கட்டில்கள் ( 200 சதுர அடி அல்லது அதற்கு மேல் ) |
கூடிய 25,000 ரூபா.
|
||
சேவைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது:
விண்ணப்பம் ஒன்று சமர்ப்பித்தல் அவசியம்.
- அருகில் உள்ள கமநல சேவை நிலையத்தின் பிரதி புதன் கிழமையும் விரிவாக்கல் உத்தியோகத்தரிடம் இருந்து மு.ப.8.30-பி.ப4.15 வரை பெற்றுக் கொள்ளலாம்
- மாவட்ட உதவிப் பணிப்பாளர் பணிமனையில் இருந்து வேலை நாட்களில் மு.ப.8.30-பி.ப.4.15 வரை பெற்றுக் கொள்ளலாம்
சேவையினை எவ்வாறு வழங்குவது :
விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் குழு தளத்திற்கு விஜயம் செய்யும் அத்துடன் விண்ணப்பக்காரர் தகைமை அடிப்படையில் திருப்திகரமாக உள்ளாரா என்பதை தீர்மானிக்கும். தகைமை பரிசோதனையின் போது விண்ணப்பதாரரது கட்டடப் பகுதி பரீட்சிக்கப்படும் அப்பகுதியின் உரிமை மீதான பதிவுகள் நிதி அமைப்பு தன்மை பற்றிய பதிவுகள் மற்றும் பௌதீக இயலுமை என்பன பரீட்சிக்கப்படும் அத்துடன் கருத்திட்ட மும்மொழிகையினையும் அவதானிக்கப்படும் வெற்றிகரமாக இருப்பின் இத்திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவ செய்யப்படும்.
அனுமதிகள் வழங்கப்பட்டதன் பின்னர் நிர்மான வேலைகளை ஆரம்பிக்கலாம் தேவைப்படுகின்ற போதெல்லாம் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும். இயந்திரங்களை கொள்வணவு செய்யவும் பொருத்துவதற்கமான தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும் நிலையத்தின் வேலைகள் முடிவற்றதன் பின்னர் கொடுப்பணவுகள் மேற்கொள்ளப்படும்.
சேவை வழங்குவதற்காக எடுக்கப்படும் கால எல்லை :
விண்ணப்பித்ததன் பின்னர் 2-6 மாதங்கள் செல்லும்.
பொறுப்பான உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்பகளுக்கான தகவல்கள் :
மாவட்டத்தின் உதவிப் பணிப்பாளர்கள்.
அன்மித்த கமநலசேவை நிலையத்தின் அடிப்படையாகக் கொண்ட பிரதேசத்தின் விரிவாக்கல் உத்தியோகத்தர்கள்.
பிரதிப் பணிப்பாளர்கள் - தொழில்நுட்பம்.
பணிப்பாளர் - (அபிவிருத்தி).
பணிப்பாளர் நாயகம்.





