Sinhala (Sri Lanka)English (United Kingdom)
 
முகப்பு பயிற்சி

பயிற்சி

ஏற்றுமதி விவசாய திணைக்களமானது ஒரு தொழில்நுட்பத் திணைக்களமாகும். அது ஏற்றுமதி விவசாய பயிர் பாரம்பரிய பயிர்ச் செய்கை முறை அறுவடை மற்றும் செயற்பாட்டு செயன்முறை என்பவற்றினை மேம்படுத்துவதன் பொருட்டு புதிய தொழில் நுட்பத்தை வழங்குகின்றது. துரை பயிற்சி செயற்பாடுகளில் உற்பத்தியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தின்பால் மாற்றுவதற்கு பரந்தளவில் ஒழுங்கமைந்துள்ளது. திணைக்களத்தின் பயிற்சிகள், உள்ளகப் பயிற்சி, விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் கறுவா சீவுதல் போன்றவற்றிற்கான பயிற்சிகள் இதில் அடங்குகின்றன.

உள்ளகப் பயிற்சி நிகழ்ச்சி

திணைக்களத்தின் உள்ளகப் பயிற்சி நிலையம் மாத்தலை, எல்லாவலயில் அமையப் பெற்றுள்ளது. இந்நிலையில் வதிவிட வசதிகளையும் சகல கற்றல் வசதிகளையும் கொண்டமைந்துள்ளன.

யாருக்காக :
உள்ளகப் பயிற்சிகள் விவசாயக்குழுக்கள, சமூக அடிப்படையிலான நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், முயற்சியாளர்கள் குழுக்கள் ஏனைய அரச/அரச தனியார்  நிறுவனத்தின் அல்லது பயிர்ச் செய்கை கறுவா, மிளகு, கோப்பி, கொக்கோ போன்ற ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் சந்தைப்படுத்தல் செயன்முறை என்பவற்றின் மீதான அறிவினைப் பெற்றுக் கொள்ள ஆர்வமுடைய திணைக்களங்கள் ஆகியோருக்காக  நடாத்தப்படுகின்றன.

சேவையின் தன்மை :

உள்ளகப் பயிற்சி நிகழ்ச்சிகள் மாத்தலை, எல்லாவலையில் அமையப் பெற்றுள்ள உள்ளகப்பயிற்சி நிலையத்தில் நடாத்தப்படுகின்றன. நிகழ்ச்சிகள் வதிவிடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. இதற்காகன பயிற்சிகள் யாவும் 2-5 நாட்களைக் கொண்ட பயிற்சிகளாகும், விரிவுரைகள் யாவும் உள்ளகப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி உத்தியோகத்தர்களினால் ஆய்வு உத்தியோகத்தர்கள் உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் வெளி வளவாளர்களினாலும் நடாத்தப்படுகின்றன. உள்ளகப் பயிற்சி நிலையத்திற்கு அன்மையில் அமையப் பெற்றள்ள பயிர் நிலத்தில் செயன்முறை பயிற்சிகளை விரிவுரையாளர்கள் மேற்கொள்கின்றனர், நிகழ்ச்சித் திட்டத்தின் தேவைப்பாட்டிற்கு அமைய களவிஜயங்களும் ஒழுங்க செய்யப்படுகின்றன. பயிற்சியாளர்களுக்கு உணவு தங்குமிடம் என்பன வழங்கப்படுகின்றன.

எவ்வாறு விண்ணப்பிப்பது :
பணிப்பாளர் நாயகத்திற்கு, பிரதிப் பணிப்பாளர்  (தொழில்நுட்பம் I) அவர்களுக்கு  அல்லது உதவிப்பணிப்பாள் (ICTA) அவர்களுக்கு எழுத்துமூல வேண்டுகோல் விடுத்தல் வேண்டும். வேன்டுகோல்களை மாவட்ட உதவிப் பணிப்hளர் மூலம் பணிப்பாளர் நாயகத்திற்கு, பிரதிப் பணிப்பாளர்  (தொழில்நுட்பம் I) அவர்களுக்கு  அல்லது உதவிப்பணிப்பாள் (ICTA) அவர்களுக்கு வேண்டு கோல் விடுத்தல் வேண்டும். சேவைகள் இலவசமாக வழங்கப்படும். வேண்டுகோல் விட்டதன் பின்னர் விண்ணப்பங்கள் ஆகக் குறைந்தது மூன்ற மாதங்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.

பொறுப்பான உத்தியோகத்தர்களும் தொடர்புகளுக்கும் :
திருமதி.ஹேமமாலி அமுனுகம, உதவிப் பணிப்பாளர் உள்ளகப் பயிற்சி நிலையம்,
திரு.யு.எம்.குனசிங்க, பணிப்பாளர் (தொழில்நுட்பம்)

விவசாயிகளுக்கான பயிற்சி வேலைத் திட்டம்


யாருக்காக :
விவசாய பயிற்சி நிகழ்ச்சிகள் விவசாயிகளுக்கும் விவசாய குழுக்களுக்கும்  நடாத்தப்படுகின்றன. மேலும் பயிர்ச் செய்கை கறுவா, மிளகு, கோப்பி, கொக்கோ போன்ற ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் சந்தைப்படுத்தல் செயன்முறை என்பவற்றின் மீதான அறிவினைப் பெற்றுக் கொள்ள ஆர்வமுடைய சமூக அடிப்படையிலான ஒழுங்கமைப்புக்களுக்கும் நடாத்தப்படுகின்றன.

சேவையின் தன்மை :
விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்புக்களை விரிவாக்கல் உத்தியோகத்தர்கள் ஆராய்ச்சி அபிவிருத்தி உதவியாளர்கள் ஆகியோருக்காக நடாத்துகின்றன. பயிற்சிகள் தெரிவு செய்யப்பட்ட நோக்கத்திற்கு அமைய களத்தில் அல்லது வகுப்பரையில் வகுப்புக்கள் நடாத்தப்படும். பயிற்சி வகைகள் பயிற்சியாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பரஸ்பர கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்படும.; பயிற்சிகள் ஏற்றுமதி விவசாய பயிருக்காக மண்பாதுகாப்பு, பயிர் ஸ்தாபித்தல,; நிழல் கட்டுப்பாடு, களை, நோக்கம் கட்டுப்படுத்தல் மற்றும் உரப் பிரயோகம் போன்றன தொடர்பில் நடாத்தப்படுகின்றன.

விண்ணப்பச் செயன்முறை :
அருகே அமையப் பெற்றுள்ள கமநல சேவை நிலையங்களில் அடிப்படை விரிவாக்கல் உத்தியோகத்தரிடம் பிரதி புதன் கிழமைகளிலும் மு.ப.8.30 – பி.ப.4.15 வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட உதவிப் பணிப்பாளர் பணிமனையில் இருந்து வேலை நாட்களில் மு.ப.8.30-பி.ப.4.15 வரை பெற்றுக் கொள்ளலாம். சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றது. வேண்டப்படும் திகதிக்கு ஆகக் குறைந்தது மூன்று மாதத்திற்கு முன் விண்ணப்பித்தல் வேண்டும்

பொறுப்பான உத்தியோகத்தர்களும் தொடர்புகளுக்கும் :
மாவட்டத்தின் உதவிப் பணிப்பாளர்கள்.
அருகில் அமையப் பெற்றுள்ள கமநல சேவை நிலையத்தின் பிரதேசத்தின் விரிவாக்கல் உத்தியோகத்தர்கள்.

கறுவா சீவுதல் தொடர்பில் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளுதல்.


யாருக்காக :
கறுவா உற்பத்தியாளர், விவசாய குழுக்கள் அல்லது சமூக அடிப்படையிலான ஒழங்கமைப்புக்ள், கறுவா சீவுதல் முறையை கற்க ஆர்வமுடையோர் விண்ணப்பம் செய்யலாம்.

சேவையின் தன்மை :
கறுவா சீவுதல் தொடர்பான களப்பரிட்சைகள் தெரிவு செய்யப்பட்ட கறுவா தோட்டங்களில் உள்ள திறன்மிக்க கறுவா சீவும் குழுவினரால் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

சேவைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது :
கடிதம், தொலைநகல், தொலைபேசி. என்பவற்றின் மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது அருகே அமையப் பெற்றுள்ள கமநல சேவை நிலையங்களில் அடிப்படை விரிவாக்கல் உத்தியோகத்தரிடம் பிரதி புதன் கிழமைகளிலும் மு.ப.8.30 – பி.ப.4.15 வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் மாவட்ட உதவிப் பணிப்பாளர் பணிமனையில் இருந்து வேலை நாட்களில் மு.ப.8.30-பி.ப.4.15 வரை பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது திஹாகொடை பல்லோல்பிடிய கறுவா ஆய்வு நிலையத்தில் பொறுப்பாகவுள்ள ஆராய்ச்சி உத்தியோகத்தரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். தென்மாகாண, சப்ரகமுவ, மேல் மாகாணங்களில் இருந்து வரும் வேண்டுகோல்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இச்சேவை இலவசமாக வழங்கப்படும். வேண்டப்படும் திகதிக்கு ஆகக் குறைந்தது மூன்று மாதத்திற்கு முன்விண்ணப்பிக்க வேண்டும்.

பொறுப்பான உத்தியோகத்தர் மற்றும் தொடர்புகளுக்கு :
மாவட்ட உதவிப் பணிப்பாளர்.
பிரதேசத்தின் விரிவாக்கல் உத்தியோகத்தர். 
பொறுப்பான ஆய்வு உத்தியோகத்தர், கறுவா ஆய்வு நிலையம், பலோல்பிடிய, திகாகொடை

வியாழக்கிழமை, 17 ஜூன் 2010 13:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது